பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை வெளியேறிய மதுமிதா தனது சம்பள பணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் .
தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் 16 நபர்கள் போட்டியாளர்களாக வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்கு எண்ணிக்கையின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஆட்கள் வெளியேற வெளியேற வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் குறைந்து, இறுதியில் நெருங்கி பழகிய நபர்களிடமே போட்டியின் காரணமாக மோதல் முற்றியது.
அந்த வகையில் மதுமிதா ஆரம்ப காலகட்டத்தில் அனைத்து போட்டியாளர்களிடமும் நெருங்கி பழகி வந்தார். ஆனால் நாளுக்கு நாள் செல்லச்செல்ல அவருக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் ஒயில் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதா செல்ல அவர் தூண்டுதலின் பெயரில் வீட்டில் உள்ள அனைவரிடமும் தாறுமாறாக சண்டையிட்டார் மதுமிதா. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் மது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் விதிமுறையை மீறியதாக கூறி அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் அவர் வெளியில் வந்த பிறகு சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொள்வதற்காக இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தின் அளவு தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிறுவனம் இவரிடம் போட்ட ஒப்பந்தத்தின்படி அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுமிதாவுக்கு 11 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.