Categories
தேசிய செய்திகள்

“இந்தியா முன்வராத நிலையில் மட்டும் ஐபிஎல் டைட்டிலுக்கு முயற்சி செய்வோம்” …. பாபா ராம்தேவ்

எந்த இந்திய நிறுவனங்களும் முன்வரவில்லையென்றால் மட்டும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்பை வாங்கும் முயற்சியில் இறங்கும் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து அதனை வாங்கி விட்டதாக வெளியாகி வரும் செய்திகளை அவ்வாறு இல்லை என மறுத்துப் பேசியிருக்கும் ராம்தேவ், “பதஞ்சலி, ஐபிஎல் டைட்டிலுக்கான எந்த விதமான ஆவணங்களையும், விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியச் சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை டைட்டிலுக்கு வேறு எந்த இந்திய நிறுவனங்களும் முன்வராத சூழ்நிலை வந்தால் மட்டுமே பதஞ்சலி டைட்டிலுக்கு விண்ணப்பிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ, ஸ்பான்சர்ஷிப் டைட்டில்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்புகளுக்கு ஆகஸ்ட் 18 தான் விண்ணபிக்க கடைசி தேதி என அதிகாரப்பூர்வ ஐபிஎல் டி-20 வலைதளம் தெரிவித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |