தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சத்யா தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டுடிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அவர் நபர் சத்யாவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்யா அருகிலுள்ளவர்களால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சத்யாவின் கணவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்தான் அறிவாளால் சத்யாவை வெட்டியது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.