சொத்து தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அருகில் சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கலைவாணன் என்பவரை தலையில் வெட்டியுள்ளார். மேலும் கத்தியை எடுத்து அவரை பலமாக குத்தியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஜெய்சங்கரை பிடித்து அருகில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அதன்பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் கலைவாணனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்சங்கரை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது “தனக்கும் கலைவாணரின் பெரியப்பாவிற்கும் சொத்து தகராறு இருப்பதால் கலைவாணன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் தான் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்தேன்” கூறி இருக்கிறார். இதனால் காவல் துறையினர் கலைவாணன் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.