Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. கைது செய்த காவல்துறை….!!

குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள மேலபணங்காடி கிராமத்தில் அருண்குமார்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இந்த தகராறு முற்றியதால் உஷாவை அருண்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |