Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. மனைவியை அடித்துக் கொன்ற கணவர்…. விசாரணையில் போலீசார்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகன் கிராமத்தில் ஆரோக்கிய சசி ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையும் ஆரோக்கிய சசி ரம்யா ஆகியோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய சசி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரம்யாவின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ஆரோக்கியசசியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |