Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்ல… தீக்குளிக்க முன்ற பாய்லர் ஆலை ஊழியர்… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள், மகன் திருமணம் முடிந்ததையடுத்து சாமிநாதன், செல்வாம்பாள் இருவரும் ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சாமிநாதன் கடன் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் நிலத்தை விற்று கடனை அடைப்பதற்காக பாகப்பிரிவினை செய்து தருமாறு தனது அண்ணனிடம் சென்று கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து சாமிநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாமிநாதன் பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சாமிநாதன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் ஓடிச்சென்று அவரை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாமிநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |