Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் இருந்தா இப்படியா பண்ணுவாங்க… 7 மாத குழந்தைக்கு கொலைமுயற்சி… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

குடும்பத்தில் இருந்த முன்விரோதம் காரணமாக 7 மாத குழந்தையை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உத்தனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி கதிர்வேலு. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் தர்சிகா ஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கதிர்வேலுவின் உறவினரான செந்தில்குமார் பண்ணைப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் கதிர்வேலுவுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் கதிர் வேலுவின் வீட்டிற்கு வந்து தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு குளக்கரைக்கு சென்றுள்ளார்.

அதன்பின் அவர் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது ஊற்றியுள்ளார். அதில் குழந்தை விழித்துக்கொண்டு அழுதுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட சுகன்யா ஓடிவந்து பார்த்தபோது செந்தில்குமார் குழந்தையின் மீது மண்ணெண்ணை ஊற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு சுகன்யா ஓடிச்சென்று குழந்தையை மீட்க முயன்றபோது அவர் மீதும் செந்தில்குமார் மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.

பிறகு இருவரையும் தீவைத்து கொலை செய்ய முயற்சித்த போது சுகன்யா கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் செந்தில்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுகன்யா திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |