அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி நடைபெறுவதாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் ? தேர்தல் முடிவுகள் இதற்குள்ளாகவே டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய தேர்தல் நடைமுறை.
சில நேரங்களில் ஒரு மாதம் கழித்து கூட தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் வழக்கமாக கடந்த சில தேர்தல்களில் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி மதியத்திற்குளாகவே வந்து விடுகின்றன. எனவே இன்னும் 1 மணி நேரத்தில் அமெரிக்கா அதிபர் யார் என்று தெரிந்து விடும், 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெற்றால் வெற்றியாளராக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் டிரம்ப் 213 உறுப்பினர்களையும், ஜோ பைடன் 237 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சி செய்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் இனி ஓட்டு போட்டு எதிர்க்கட்சியினர் வெற்றி பெற முடியாது. மிகப்பெரிய வெற்றி பெறப் போவதாகவும், இன்றிரவு அறிக்கை விட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் ட்விட் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
We are up BIG, but they are trying to STEAL the Election. We will never let them do it. Votes cannot be cast after the Polls are closed!
— Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020
I will be making a statement tonight. A big WIN!
— Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020