ஆந்திர மாநிலத்தில் மூன்று தலை நகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனசேனா கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.