கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்ஜினியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த வாலிபர் தீடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான வளர்மதி என்பவர் அந்த வாலிபரை தடுத்துள்ளார். அதன்பின் காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயிலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் நடராஜரின் மகனான பழமலை என்பது தெரியவந்துள்ளது.
இவர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு பயின்று இருக்கிறார். இந்நிலையில் பழமலை தாத்தாவிற்கு அரசாங்கம் விவசாயம் செய்வதற்காக நிலம் வழங்கியுள்ளது. இந்த நிலமானது பழமலையின் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் சொந்தமானது. அவர்களின் காலத்திற்கு பிறகு எனது தந்தைக்கு சொந்தமாக இருக்க வேண்டிய நிலத்தை எனது அத்தை வேறு ஒருவருக்கு கிரைய பத்திரம் செய்துள்ளார். இது குறித்து எனது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து பழமலை தனது அத்தை வீட்டிற்கு இந்த நிலம் விவகாரம் குறித்து பேச சென்றுள்ளார்.
அப்போது அவரின் அத்தை பழமலை தனது வீட்டில் இருந்த பணத்தை திருடி விட்டதாகவும், அவருடன் வந்த ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், காவல் நிலையத்திற்கு சென்று பொய்யான புகார் அளித்துள்ளார். எனவே, தனது பாட்டிக்கும் தந்தைக்கும் சொந்தமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு தங்கள் குடும்பத்திற்கு தரவேண்டும் என்று ஆட்சியரிடம் பழமலை வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.