Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி… தவறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கீழே தவறி விழ, அவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தவறு என்று ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் சிலர் ரயிலுக்கு சரியான நேரத்தில் வராமல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகம் நேர்ந்து வருகின்றது. சிலரை காப்பாற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது இங்கு அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகாத் என்ற ரயில் நிலையத்தில் பயணி ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்தபோது, கால் வழுக்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். ரயில் மெதுவாக நகர்ந்ததால் ரயிலுடன் சேர்ந்த அவரும் இழுக்க பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே நிலைய தலைமை எழுத்தாளர் உடனடியாக அவரை இழுத்து காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.

Categories

Tech |