Categories
Uncategorized

கவனம்! இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா…? அப்படினா உறுதியா அல்சர் இருக்குனு அர்த்தம்…!!

இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.

அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி செய்து விடலாம். பெரும்பாலும் வலிநிவாரணிகளை அதிகமாக எடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றது.

அறிகுறிகள்:

மேல் வயிற்றில் வலி:

அடிவயிற்றில் ஏற்படும் கடுமையான வலி செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதனால் சிறு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. எனவே அங்கு தான் அந்த வலி ஏற்படும்.

குமட்டல்:

வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு அறிகுறியாக குமட்டல் உணர்வு ஏற்படும். இந்த சமயத்தில் கொஞ்சம் உணவு சாப்பிடுவதால் அல்சரால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கலாம்.

வாந்தி ஏற்படும்:

வயிற்றில் புண் இருந்தால் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும். இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் வலி நிவாரணிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இறப்பை குழாய் வழியே இரத்தம் கசிதல்:

இறப்பை குழாய் வழியே ரத்தம் கசிந்த ரத்தம் வந்தால் பல்வேறு வகையான உடல்நல பிரச்சினைகள் ஏற்படுத்தும். இந்த ரத்தபோக்கு மேல் வயிற்று வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால் அது வயிற்றுக்கான அறிகுறி. வயிற்று புண் ஏற்பட்ட நோயாளிகள் வாந்தி எடுக்கும் போதோ அல்லது கழிவறைக்கு செல்லும் போது அவர்களுடைய மலம் கருப்பு நிறமாக இருக்கும். மலத்தில் ரத்தம் வருவதற்கு வேறு நோய் காரணம் இருக்கலாம். எனவே பெருங்குடல் அழற்சி அல்லது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம். எனவே மருத்துவரை நாடுவது நல்லது.

மார்பு வலி:

அல்சர் இருக்கும் நோயாளிகளுக்கு மார்பில் வலி ஏற்படும். இது இதயமற்ற மார்பு வலி ஆகும். இது அல்சர் புண்ணால் ஏற்படும் வலியைக் குறிக்கிறது.

வழக்கத்தைவிட அதிகமாக வயிறு வீக்கம்:

வழக்கத்தை விட சற்று வயிறு அதிகமாக வீங்கி இருந்தால் அது வாயு பிரச்சினையாக கூட இருக்கலாம். அல்லது அல்சர் புண்ணாக கூட இருக்கலாம்.

குறைவான பசி:

இது குறைவான ஆனால் சாத்தியமான ஒரு அறிகுறி என்றால் அது எடை இழப்பு ஆகும். விரைவிலேயே பசி இல்லாமல் போவதை உணர முடியும். மேலும் சாப்பிடும் போது உங்கள் வயிறு செளகரியமாக உணர வைக்கும்.

வித்தியாசமான சுவையை உணர்வீர்கள்:

அல்சர் புண் சாதரணமாக பசியை கட்டுப்படுத்துகிறது. ஆனால் சிலர் வயிற்றில் பசிக்கும் போது எரியும் மற்றும் கசக்கும் உணர்வை உணர்கின்றனர்.

முதுகு வலி:

இந்த புண்கள் காரணமாக வயிறு மற்றும் சிறுகுடலில் தொடர்பு ஏற்படலாம். இதனால் முதுகில் வலி ஏற்படும்.

அதிகமாக ஏப்பம் வருதல்:

ஏப்பம் வருதல் என்பது பொதுவான ஒரு அறிகுறி. உங்களுக்கு வழக்கத்தைவிட அதிகமாக ஏப்பம் வந்தால் மருத்துவரை நாடலாம். இதனால் புண் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் ஏப்பம் அதிகமாக இருந்தால் அதற்கான காரணத்தை உங்கள் மருத்துவரைச் சந்தித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

Categories

Tech |