நம்முடைய வங்கி கணக்கில் பணம் இல்லாதபோது தெரியாமல் பணம் எடுத்தல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
சில நேரங்களில், அவசரமாக எங்காவது செல்லும் போது ஏடிஎம் மையத்திற்குச் சென்று அவசர அவசரமாகப் பணத்தை எடுப்போம். அந்த சமயம் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமலேயே பணம் எடுப்பதும் உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்திலேயே பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பார்கள். அப்படி பேலன்ஸ் செக் பண்ணாமல் அவசரமாக பணம் எடுத்தால் என்ன ஆகும்? ஒருவேளை உங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.400 மட்டுமே இருக்கிறது. ஆனால் நீங்கள் 500 ரூபாய் எடுக்க முயற்சித்தால் பணம் வராது. எனவே insuffient Balance என்று வரும். இதை சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
நாம் தெரியாமல், நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை விட அதிகமாக, ஏடிஎம் எந்திரத்தில் எடுக்க முயற்சித்தால் அதற்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை வெகு காலமாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அதுகுறித்து பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, முன்கூட்டியே உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் விவரத்தைத் தெரிந்துகொண்டு பின்னர் பணம் எடுக்க வேண்டும்.
SBI வங்கி , ICICI வங்கி, HDFC பேங்க், KOTAK MAHINDRA பேங்க் மற்றும் YES பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. SBI இந்தியா வங்கியில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. HDFC வங்கியில், அதே வங்கியின் ஏடிஎம்களில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் வரியுடன் சேர்த்து 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோடாக் மகிந்திரா வங்கி மற்றும் AXIS வங்கியிலும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.