Categories
லைப் ஸ்டைல்

கவனம்! இந்த 5 அறிகுறிகள் இருந்தால்…. சிறுநீரகத்தில் பிரச்சினை நிச்சயம்…. உடனே மருத்துவரை பாருங்கள்…!!

நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளை நம்முடைய உடலுக்கு  கொடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றுவது, சிவப்பணுக்களை உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்கிறது. எனவே நம்முடைய சிறுநீரகங்கள் ஆரோக்யத்தில் நாம் கவனம் செலுத்துவது அவசியம். சிறிய பிரச்சினை என்றாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்சினையை தெரிவிக்கும் சில ஆரம்பகால அறிகுறிகள் பற்றி தெரிய வேண்டியது அவசியம். அவை என்னவென்று பார்க்கலாம்.

சிறுநீர் மாற்றம்:

சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் நிறத்தை கவனிக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரின் நிறமானது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லக் கூடியவை. ஒவ்வொருவருடைய சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் சிறுநீரானது அடர்ந்த நிறத்தில் நுரை போன்று இருப்பதுடன், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இவை சிறுநீரகத்தில்  பிரச்சினை இருப்பதன் அறிகுறிகள். இதை அறிந்து ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம்.

சோர்வு:

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் சரியான அளவிலான ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை உறுதி செய்யும். மேலும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்யும். ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உடல் சோர்வடையும்.

மூச்சு விடுவதில் சிரமம்:

மூச்சு விடுவதில் சிரமம் சிறுநீர் பிரச்சனைகளில் ஒன்று. ஏனெனில் குறைவான ரத்த சிவப்பணுக்கள் மற்றும் உடலில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாமல் போகும். இதன்காரணமாக மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

சரும பிரச்சினைகள்:

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து நச்சுக்களை பிரித்து வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்கின்றன. இந்த நிகழ்வு சரியாக நடைபெறாமல் இருந்தால் உடலில் நச்சுகள் தேங்க ஆரம்பித்து அதன் விளைவாக சருமத்தில் அரிப்பு மற்றும் பிற சரும பிரச்சனைகள் ஏற்படும்.

வாய் துர்நாற்றம்:

வாயில் திடீரென்று கடுமையான துர்நாற்றம் வீசுவதால் இரத்தத்துடன் அதிக அளவு நச்சுக்கள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அதிகமாக துர்நாற்றம் ஏற்பட்டால் சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Categories

Tech |