பேரிச்சம் பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சை நமக்கு நன்மை செய்யக்கூடியது. ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.
பேரிச்சம் பழத்தை உலரவைக்கப்படும்போது அதில் பாக்டீரியாக்கள் பரவாமல் இருக்க ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றது. இதனால் வயிறு வலி, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பேரீச்சையை அதிகம் எடுத்துக்கொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு வழி வகுக்கும்.
அதிகளவு சாப்பிடுவதால் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை உண்டாக்க வாய்ப்புண்டு.
பேரிச்சம்பழம் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அதிக கலோரிகள் உள்ளது. எனவே இது அதிக எடை அதிகரிப்பு பங்களிக்கும்.
உலர்ந்த பேரிச்சம்பழத்தில் சரும பாதிப்புகளை ஏற்படுத்தும் சலப்பைடு கலந்திருக்கலாம். எனவே சருமத்தில் தடிப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது.
பேரிச்சம் பழம் இனிப்பு சுவையை கொண்டு இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவு பாதிப்பை உண்டாக்கும்.
பேரிச்சம் பழம் இயற்கையான இனிப்பு கொண்டிருந்தாலும் சிலருக்கு பிராக்ட்டோஸ் சகிப்புத் தன்மை இருப்பதால் ஜீரணிப்பதில் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.
பேரீச்சம்பழத்தை பளபளப்பாக்க பெட்ரோலியம் அல்லது கெமிக்கல் கலந்த ஸ்பிரே அடிக்கப்படுகின்றது. இது கடுமையான செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.