Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! ஆபத்தான பொருட்களை…. குழந்தைகளுக்கு எட்டாமல் வையுங்கள்….!!

தாய் ஒருவர் சமையல் செய்துகொண்டிருந்த போது குழந்தை சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி தன்னுடைய குழந்தையை விளையாட வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மாத்திரைகளை எடுத்து குழந்தை அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. ஆனால் கனிமொழி கவனிக்காமல் சமையல் வேலையில் மும்முரமாக இருந்துள்ளார். இதையடுத்து குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அங்கே பார்த்த போது குழந்தை இரும்புச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் நிலை மோசமானதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழந்தைக்கு 36 மணி நேரம் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது குழந்தை உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |