தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வட தமிழகம், புதுவை, காரைக்கால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதன்பிறகு நவம்பர் 22-ம் தேதி வட தமிழகம், புதுவை, காரைக்கால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து நவம்பர் 23, 24, 25-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மேலும் நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் ஆந்திரா, தமிழகம்-புதுவை, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது