Categories
தேசிய செய்திகள்

மக்களே! கவனம்…. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றால்….. இனி இப்படித்தான் நடக்கும்….. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர்.

இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து டிடிஇஆர் கேட்டபோது சரிவர பதில் அளிக்காததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிடிஇஆர் உடுப்பி காவல் நிலையத்தில் 5 இளைஞர்கள் மீதும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 இளைஞர்களையும் கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அந்த 5 இளைஞர்களுக்கும் நீதிபதி ஒரு மாதம் சிறை தண்டனை விதித்ததோடு, டிக்கெட் எடுக்காததற்காக தலா 1000 அபராதமும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக தலா 100 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Categories

Tech |