இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை செய்வது மற்றும் கடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2000 ரூபாய் அபராதத்துடன், ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். அதன்பிறகு நீங்கள் ஆன்லைனில் வெயிட்டிங் டிக்கெட் புக் செய்திருக்கும் நிலையில், ஒருவேளை அது தானாக ரத்து செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ரயிலில் பயணிக்க கூடாது.
ஒருவேளை ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் டிக்கெட் பரிசோதகர் ரயில் பயணத்திற்கான முழு கட்டணத்தையும் வசூலிப்பதோடு, ரூபாய் 250 அபராதமும் பெற்றுக் கொள்வார். இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் பிளாக் டிக்கெட் விற்பனை செய்தால், 10,000 ரூபாய் அபராதத்துடன், 3 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால் 500 ரூபாய் அபராதத்துடன் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் நீங்கள் ரயிலில் எந்த கோச்சில் டிக்கெட் எடுத்தீர்களோ அதை பெட்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயர் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பயணத்திற்கான முழு தொகையும் வசூலிக்கப்படுவதோடு, ரூபாய் 250 அபராதமும் விதிக்கப்படும்.