Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்…. பேரவையில் ஸ்டாலின் அதிரடி..!!

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு  மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார்.

இதை எதிர்த்து பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனில் தேவையான நிதியை மாநிலங்களுக்கு தரலாம் என்றும் அவர் பேசினார். மேலும் இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று தெரிவித்த அவர், அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து மாநிலங்களும் ஏற்கும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது எனவும், மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் விதமாகவும் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவர் தெரிவித்த அவர்தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |