Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கவனத்திற்கு!…. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது மழையின் காரணமாக ஏதேனும் பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, மழை நீர் தேங்கியுள்ளதா என்று பள்ளிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து மழையின் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்டு சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, அனக்காபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 5 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |