Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் அரசு பேருந்துகளில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.கூட்டத்தை தவிர்க்கும் வகையில் பலரும் இருபதாம் தேதி பயணத்திற்கு அதிக அளவில் முன்பதிவு செய்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வியாழக்கிழமை பயணத்திற்கு இதுவரை 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் விரைவில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது m

Categories

Tech |