Categories
லைப் ஸ்டைல்

கவனம்! காய்கறி வாங்கும் போது…. இதை பார்த்து வாங்குங்க…!!

பெரும்பாலும் நம்முடைய உடலுக்கு  ஆரோக்யம் சேர்ப்பதில் இன்றியமையாதது காய்கறி வகைகள் தான். அப்படி நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் இந்த காய்கறிகள் நல்லதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் கடையில் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

காய்கறிகளை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்?

குடை மிளகாய் தோல் சுருங்காமல் இருப்பதை பார்த்து வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.

முள்ளங்கி லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, நல்ல காய்.

வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால் நல்ல காய் விதைகள் குறைவாக இருக்கும்.

பெரிய வெங்காயம் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.

வெண்டைக்காயை நுனியில் கில்லி அது ஒளி பட்டால் அது நல்ல வெண்டைக்காய்.

முளைவிட்ட சேப்பங்கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. எனவே உருண்டையாக இருக்கும் கிழங்கை பார்த்து வாங்க வேண்டும்.

உருளைக்கிழங்கு வாங்கும்போது அதில் எதாவது தழும்புகள் இருந்தால் வாங்க வேண்டாம்.

நன்கு பச்சை நிறத்தில் இருக்கும், அதே போல ஒடித்தால் சட்டுனு உடையும் பீன்ஸ் நல்லது.

Categories

Tech |