Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாதுகாப்பான இடத்திற்கு போங்க…. அதிகரித்து வரும் நீர்வரத்து…. ஆட்சியரின் எச்சரிக்கை….!!

அணைக்கட்டில் நீர் அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பாலாற்றில் இதன் காரணத்தினால் நீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்னர் பொன்னை அணைக்கட்டிலிருந்து 4,100 கனஅடி நீர் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றின் கரையோரம் இருக்கும் பூண்டி உள்பட 16 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்க முயற்சி செய்யவும் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் ஆற்றின் அருகாமையில் நின்று அதை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருவதையும் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Categories

Tech |