அமெரிக்கா தங்கள் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என்று சீனா சபதம் எடுத்துள்ளது.
நாட்டில் இருக்கின்ற சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மே மாதம் 11 ஆம் தேதி அமெரிக்கா உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா விசாக்களை நீட்டிக்க விட்டால், சீனா ஊடகவியலாளர்கள் வருகின்ற நாட்களில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுவார்கள். இதனைத் தொடர்ந்து சீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதற்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என்று சீனா கூறியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து சீன பத்திரிக்கையாளர்கள் எவருக்கும் விசா நீட்டிக்கபடவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.அமெரிக்கா சீனா ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உடனடியாக நிறுத்தி ஏற்பட்டுள்ள தவறை சரி செய்ய வேண்டும். அமெரிக்கா இவ்வாறே தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தால், சீனா தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய மற்றும் நியாயமான பதிலடியை கட்டாயம் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.