Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்து இவர் வந்தா நிதானமாக விளையாட முடியாது” பிரபல வீரரை குறிப்பிட்ட சஞ்சு சாம்சன்…!!

இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விராட் கோலியை குறித்து தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.

 

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய தொடர்களில் இறுதியாக பங்கேற்றார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்” டி20 போட்டிகளில் இந்திய அணி வேகமாக ரன்களை குவிக்க வேண்டும்.

நமக்கு பின்னர் விராட் கோலி களமிறங்க உள்ளார் என்றால் நம்மால் 10 பந்துகளை கூட ரன் எடுக்காமல் தவறவிட்டு நிதானமாக விளையாட முடியாது. அதைத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் நான் செய்து வருகிறேன்.” எனக் கூறினார். மேலும் நான் உட்பட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ஐபிஎல் தொடர் நடந்தால் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுமே மீண்டு எழும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |