Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடி நிறுவனத்தின் புதிய கார் … இந்தியாவில் விரைவில் அறிமுகம் ..!!

இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Image result for audi q3

மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உள்புறத்தில் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கிளைமேட் கண்ட்ரோல் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது.

Related image

மேலும், புதிய மாடலில் டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஆடி கியூ3 மாடல் பல்வேறு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் இருவித என்ஜின்கள்: 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் TFSI பெட்ரோல், 2.0 லிட்டர் TDI என்ஜின் இருவித டியூனிங்கில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Categories

Tech |