ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய ஆடி கியூ7 பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜூம், காரை சுற்றி கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. மேலும் , இதில் ரேடியேட்டர் கிரில் ஃபிரேம் மற்றும் முன்புற கிரில், ஏர் இன்டேக் ஸ்டிரட்களில் டைட்டானியம் பிளாக் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கியூ7 எஸ்.யு.வி மாலின் டோர் ட்ரிம் ஸ்ட்ரிப்களிலும் டைட்டன் பிளாக் கிளாஸ் மற்றும் குவாட்ரோ எம்பாஸ் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதன் கண்ணாடி மற்றும் ரூஃப்லைனில் ஹை-கிளாஸ் பிளாக் ஃபிரேம் மோல்டிங் மாற்றும் ஆடி கியூ7 ரூஃப் ரெயில்கள் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் கொண்டுள்ளது. இந்த காரில் 3.0 லிட்டர் வி6 TDI டீசல் அல்லது 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த என்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறனையும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறனையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு டிப்டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காரின் விலை ரூ.82.15 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.