Categories
அரசியல்

“செவிவழி தகவலை கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கையா இருக்கு” ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்..!

செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் செய்யும் வேலையை ஒரே ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கும் விதத்தில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் மதிப்பு ரூ.500 கோடியாகும், ஆனால் ரூ.1165 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.700 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ” எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டியுள்ள கருத்துக்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், இந்த டெண்டர் முறை செயல்ப்பாட்டின் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை, ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்காக கடந்த 19.02.2020 அன்று நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒப்பந்த புள்ளிகள் இ-டெண்டர் முறையில் கோரப்படத்தில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை.

ஒப்பந்தம் கோரப்பட்டதில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக, உண்மைக்கு மாறான தகவலை தெரிவிப்பதா? என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இ-டெண்டர் முறையில் டெண்டர் போடப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி வழிகாட்டுதலின் படி தரமான சாலைகள் கட்டமைப்பை உருவாக்குவதற்காக ஏற்கனவே 2019ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்காக தான் இந்த டெண்டர் விடுவிக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |