சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல அசம்பாவிதங்களை நிகழ்த்த சில அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் வருகிறது. இந்நாள் இந்திய நாட்டிற்கு மிக முக்கியமான நாள் என்பதால் அதனை கொண்டாடாமல் இருப்பது நன்றாக இருக்காது.
எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் சுதந்திர தினத்தை கொண்டாட அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்ற சில அமைப்புகள் முடிவெடுத்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவிடாமல் பிரதமர் மோடியை தடுக்கவும் தனிநாடு கோரிக்கை நாடு முழுவதும் ஒலிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.