ஆகஸ்ட் 31 வரை விதிக்கப்பட்ட ஊராடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31 க்குப் பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கில் தொழில் நிறுவனங்கள், தனிக் கடைகள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவருக்கும் தளர்வுகளின் அடிப்படையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையேயான பொது தனியார் பேருந்து, ரயில் போக்குவரத்தும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஜிம்கள் , மால்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.