தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த புகழ் பெற்றவர் அனுசியா பரத்வாஜ். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான நாகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதிணை கதாபாத்திரத்திற்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகை அனுசியா பரத்வாஜிக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே அர்ஜுன் ரெட்டி படம் வெளியானதில் இருந்து கடும் மோதல் நிலவுகிறது.
இதன் காரணமாக விஜய் தேவரை கொண்ட ரசிகர்களுடன் அனுசியா அடிக்கடி மல்லுக்கட்டி வருகிறார். இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை கலாய்த்து எழுதிய பதிவால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் இவரை ஆண்ட்டி என கிண்டலடித்து டிரெண்ட் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இவர் ஒவ்வொரு அக்கவுண்டையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துள்ளதாகவும் அதனை நீக்கவில்லை என்றால் போலீசாரிடம் புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.