Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : 2-வது டி20 போட்டியில் …. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது .

ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார் .வங்காளதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி 122 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக 18.4 ஓவர்களில் 123 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது . இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில்     2-0  என்ற கணக்கில் வங்காளதேச அணி  முன்னிலையில் இருக்கிறது . இரு அணிகள் இடையேயான 3-வது போட்டி நாளை (6-ம் தேதி) நடைபெறுகிறது.

Categories

Tech |