வங்காளதேச அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 3 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 105 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .இறுதியாக 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது . இதனால்3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான கடைசி போட்டி நாளை (9ஆம் தேதி) நடைபெறுகிறது.