ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவருடைய காயம் இன்னும் குணம் அடையாததால் 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவும் உறுதிசெய்துள்ளது.