ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது .
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65.1 அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 35 ரன்னும் குவித்தனர் .ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் ஜோடி களமிறங்கினர்.இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 38 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்துள்ளது. இதில் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்னும் , நாதன் லயன் ரன் எதுவும் இன்றி களத்தில் உள்ளனர்.