ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 236 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக டேவிட் மலான் 80 ரன்னும் , கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர் .இதன்பிறகு 237 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .
இதில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது . இதன்பிறகு 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி திணறியது .இதனால் 55 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது . இறுதியாக 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 448 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரரான ஹாசீப் ஹமீத் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .இதன்பிறகு களமிறங்கிய டேவிட் மாலன் 20 ரன்னும், ரோரி பர்ன்ஸ் 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவித்துள்ளது