ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்னில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்னும், ஓலி போப் 35 ரன்னும், ஹசீப் ஹமீது 25 ரன்னும் குவித்தனர் . இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதன் பிறகு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .ஆனால் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது .இதில் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 94 ரன்னும், மார்னஸ் லேபஸ்சேகன் 74 ரன்னும், டிராவிஸ் ஹெட் 112 ரன் எடுத்தனர். இறுதியாக இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்துள்ளது.