Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG : இங்கிலாந்து அணியில் 2 பேருக்கு கொரோனா…. தாமதமாக தொடங்கிய போட்டி ….!!!

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த 2-ம் நாள் ஆட்டதில்  வீரர்கள் குழுவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் வீரர்கள் குழுவில் கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இதில் இங்கிலாந்து அணியின் துணை பணியாளர்கள் குழுவில் நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜன்  பரிசோதனையில் இரண்டு பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய  குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒருவேளை ப்ளெயிங் லெவேனில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் மாற்று வீரர்களை கொண்டு மீதமுள்ள 3 நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |