Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : உஸ்மான் கவாஜா அதிரடியில் …! ஆஸ்திரேலியா 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில்  ஆஸ்திரேலிய அணி 416 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3  டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான      4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 126  ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இன்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதில் ஆஸ்திரேலியா அணியில்  உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 403 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Categories

Tech |