ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், அஷார் அலி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை 65 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்திருந்த போது, பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பைச் சேர்த்த இணை என்ற சாதனை படைத்தது.
அதன்பின் ஷான் மசூத் 27 ரன்களிலும், அஷார் அலி 39 ரன்களையும் அடித்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம், ஹேரிஸ் சோஹைல் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அசாத் ஷபிக் அரை சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின் அசாத் 76 ரன்கள் அடித்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷபிக் 76 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Australia's day!
Asad Shafiq battled hard with a valiant 76, but the home team's bowlers were exceptional, bowling Pakistan out for 240. Mitchell Starc was the pick of the bowlers with 4/52.#AUSvPAK Scorecard ⬇️ https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/NqevQ7zwJG
— ICC (@ICC) November 21, 2019