ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3-வது டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதில் அதிகபட்சமாக பின் சண்டிமல் 25 ரன்னும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 39 ரன்னும் குவித்தனர்.
இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் கைப்பற்றினார்.இதைதொடர்ந்து களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி 122 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.