Categories
கிரிக்கெட் விளையாட்டு

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ஆஸி. முன்னாள் பயிற்சியாளர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் நெஞ்சு வலி காரணமாக பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேரன் லேமன் சில நாள்களுக்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியில் தனது மகனின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

டேரன் லேமன்

இதனால் உடனடியாக ஆஸ்திரேலியா திரும்பி மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டார். நேற்று தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய டேரன், அறுவைச் சிகிச்சைக்காக பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன்

இதுகுறித்து டேரம் லேமன் பேசுகையில், ”என்மீது அக்கறை கொண்டதற்காக ஆஸ்திரேலியக் கிரிக்கெட் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். சிறந்த மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டும் எனது பணிக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Categories

Tech |