ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது.
கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது.
இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். ஆகையால் ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற இந்தச் செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததும், நன்மை பயக்கக்கூடியதும் என்று தெரிவித்தார்.