Categories
உலக செய்திகள்

“சீனாவை எதிர்க்க அனைத்து நாடுகளும் இணைய வேண்டும்!”.. – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்..!!

ஆஸ்திரேலிய முன்னாள் அதிபர், அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, சீனாவின் பொருளாதாரத்திற்கும் புவிசார் வற்புறுத்தலிற்கும்   அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

சீனாவை தனியாக ஒரு நாடு எதிர்த்து நின்றால் அந்நாட்டுக்கு சீனா தண்டனை கொடுக்கும் என்று உறுதியாக தெரிந்தது. மேலும் மனித உரிமைகள் குறித்த விஷயங்களில் சீனாவை எதிர்ப்பதற்கு, மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் பிற நாடுகளுக்கு சீனாவுடன் மோதல் இருந்தால், தனியாக எதிர்க்காமல் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து எதிர்ப்பது நல்லது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |