ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிற நாட்டு பயணிகள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனோ தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து தங்கள் உறவினர்களை சந்தித்ததாக பலர் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தின் அதிகாரிகள், ஜாம், பிஸ்கட்டுகள் கோலா கரடி பொம்மை போன்றவற்றை பரிசாக வழங்கினர்.
ஆஸ்திரேலிய சுற்றுலாத் துறை அமைச்சரான டேன் டேகன், கொரோனா தொற்றால் இரண்டு வருடங்களாக முடங்கி கிடந்த சுற்றுலாத்துறை தற்போது மீண்டுவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.