ஆஸ்திரேலிய நாடு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை “கோவிஷீல்டு” என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாடு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்வதற்காக காத்திருந்த சிக்கலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் சீனாவின் “சினோவாக்” தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியாவிற்கு இந்திய மாணவர்கள் உடனடியாக செல்ல இயலுமா ? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.