Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா…..!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பாபர் ஆசம்(6), ரிஷ்வான்(0), இமான் உக் ஹக்(14), சோஹைல்(8) என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

பந்தை பவுண்டரிக்கு விளாசிய அஹ்மது

பின் களமிறங்கிய அஹ்மது சிறப்பாக விளையாடி 45 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு, 106 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிட்சர்ட்சன் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்டார்க், அப்போட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் ஆகியோர் அதிரடியில் எதிரணியைத் திணறடித்தனர். இதன் மூலம் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலிய அணி 56 ரன்களை விளாசியது.

அரோன் பின்ச் - டேவிட் வார்னர்

அதனைத் தொடந்தும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் அரை சதமடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11.5 ஓவர்களில் 109 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 52 ரன்களுடனும், வார்னர் 48 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.

இதன் மூலம் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சீன் அப்போட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல் பட்ட ஸ்டீவ் ஸ்மித் தொடர்நாயகன் விருதைப்பெற்றார்.

Categories

Tech |