எரிமலை வெடிப்பால் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேரழிவை எதிர்கொண்ட டோங்கா நாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு நிவாரண பொருட்கள் அனுப்பியிருக்கிறது.
டோங்கா என்ற பசிபிக் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி உருவாகி பெரும் அழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட சாம்பல் விமான நிலைய ஓடுபாதை முழுக்க படர்ந்து காணப்பட்டது.
அது தற்போதுதான் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் டோங்கா தீவிற்கு நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கிறது. தற்போது, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து டோங்காவிற்கு விமானம் மூலமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.